Tuesday 4 April 2017

எனக்குப் பிடித்த பாடல்கள்

அன்பு நட்புகளுக்கு வணக்கம்,
                                              இசை இன்றி உலகில் எதுவும் இல்லை.நாம் கேட்கும் பாடல்கள் இசையைத் தாண்டி, வரிகளைத் தாண்டி ஒரு காரணத்தையோ அல்லது சம்பவங்களையோ சுமந்திருக்கும்.யாரேனும் நபர்களையோ அல்லது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தையோ நினைவூட்டும்.அப்படி எனக்குப் பிடித்த பாடல்களை  உங்களிடம் கொள்கிறேன்.
                                                            நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது பாடலின் இசையை ரசிக்கின்றோம் மேலும் நம் மனம் துன்பத்தில் சுழலும் போது பாடலின்  வரிகளை கவனிக்கின்றோம் என்று மனோத்தத்துவம் சொல்கிறது.

1. புது வெள்ளை மழை  :
                       
 ரோஜா திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் ஒவ்வொரு முறை கண்ணை மூடிக் கொண்டு கேட்கும் போதும் , உச்சந்தலையில் பனிக்கட்டியை அள்ளி  வைத்தார் போல்  ஒரு குளுமையை உணர முடியும். ஏ ஆர்  ரஹ்மானின் மாயாஜாலம்.

2.மழை இங்கில்லையே :
எனக்கு மிகவும் பிடித்த லட்சுமி ராமகிருஷ்ணனின்  இயக்கத்தில் உருவான இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது.வயதான  பாட்டியை மையமாக வைத்து இயக்கப்பட்ட இந்த பாடல்  வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் தெய்வீக மணம் பரப்பும்.வாழ்வின் இறுதி காலங்களை ஒரு வித்தியாச நோக்கில் யோசிக்க வைக்கும்.

3.என்ன மறந்தேன் :
இவன் வேற மாதிரி என்ற படத்தில் வரும் இந்த பாடல், காதல் வயப்பட்ட பெண்ணின்எண்ணத்தை பிரதிபலிக்கும்.துள்ளலான இசையும் ரொம்ப அழகு.

4.கண்ணே காலைமானே :
கவிஞர் கண்ணதாசனின் கடைசி வரிகள்.இந்தப் பாடலைப் பிடிக்காதவர் யாரும்  இல்லை.
     " உனக்கே உயிரானேன் .எந்நாளும் எனை நீ மறவாதே."
என்ற வரிகள் காலத்தை தாண்டி வாழும் காதலைச் சொல்லும்.இந்த பாடலின் ஆரம்பம் முதல் கடைசி வரை இழையோடும் சோகம் வலி நிறைந்தது.

5.மாய நதி இன்று :
கபாலி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் வயதான தம்பதியரின் காதலைச் சொல்லும் அழகியல் நிறைந்தது. காதலுக்கு வயது ஏது? இடம் பெற்ற சொற்களைக் கையாண்ட விதம் அருமையோ அருமை.


தொடரும் இந்த பாடல் பயணம்.நன்றி.
                                                                                        - அனிதா சிவா



1 comment:

Thulasidharan V Thillaiakathu said...

அம்மணி மற்றும் இவன் வேற மாதிரி படப் பாடல் கேட்டதில்லை. மற்றவை மிகவும் பிடிக்கும்..வைக்கம் விஜயலட்சுமியின் குரம் ஆஹா!! ரொம்ப பிடிக்கும்...கேட்கிறேன் அனிதா...
மிக்க நன்றி பகிர்விற்கு

கீதா